ரேணுகா பரமேஸ்வரி அம்மனுக்கு ஆடி திருவிழா விமரிசை
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் பாவாபேட்டை ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடி திருவிழா விமரிசையாக நடந்தது.காஞ்சிபுரம் பாவாபேட்டை தெருவில் உள்ள ரேணுகா பரமேஸ்வரி அம்மனுக்கு ஆண்டுதோறும் ஆடி திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டிற்கான ஆடி திருவிழா நேற்று விமரிசையாக நடந்தது.இதில், காலை 9:00 மணிக்கு அலங்காரத்தில் எழுந்தருளிய ரேணுகா பரமேஸ்வரி அம்மன் வீதியுலா வந்தார். தொடர்ந்து கோவில் வளாகத்தில் அம்மனுக்கு கூழ்வார்க்கப்பட்டது.மதியம் 2:00 மணிக்கு ரேணுகா பரமேஸ்வரி அம்மன், கருக்கினில்அமர்ந்தவள் அம்மன் கோவிலில் எழுந்தருளினார். அங்கு பக்தர்கள் பொங்கல் வைத்து படையலிட்டனர்.அங்கிருந்து மாலை 6:00 மணிக்கு புறப்பட்டு, பாவாபேட்டை தெருவில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.