உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / புளியாத்தம்மன் கோவிலில் ஆவணி திருவிழா

புளியாத்தம்மன் கோவிலில் ஆவணி திருவிழா

காரை:காஞ்சிபுரம் அடுத்த, காரை கிராமத்தில் பிடாரி புளியாத்தம்மன் கோவிலில், ஆவணி திருவிழா விமரிசையாக நடந்தது. இந்த விழாவை முன்னிட்டு, கடந்த 7ம் தேதி காலை பொங்கலிடும் நிகழ்ச்சி, 8ம் தேதி கரக ஊர்வலம் நடந்தது. நேற்று முன்தினம், காலை 11:00 மணி அளவில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. மதியம், 1:00 மணிக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. இரவு, மலர் அலங்காரத்தில் பிடாரி புளியாத்தம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ