மேலும் செய்திகள்
ஜல்லி கற்கள் பெயர்ந்த சாலை மணவாளநகரினர் அவதி
03-Feb-2025
வாலாஜாபாத்:வாலாஜாபாத்- ஒரகடம் நெடுஞ்சாலையில், தேவேரியம்பாக்கம் கூட்டுச்சாலை பகுதி உள்ளது. லிங்காபுரம், சங்கராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் தனியார் கல்குவாரி மற்றும் கிரஷர்களில் இருந்து லோடு ஏற்றிச் செல்லும் லாரிகள், தேவேரியம்பாக்கம் கூட்டுச்சாலை வழியாக பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றன. சில லாரிகளில், தார்ப்பாய் போர்த்தாமல் ஓவர் லோடு ஏற்றி செல்வதால், ஜல்லி கற்கள் கீழே கொட்டி சாலையில் சிதறி கிடக்கின்றன. அவ்வாறு தேவேரியம்பாக்கம் கூட்டுச்சாலையின் மையப் பகுதி சாலையில், அதிக அளவிலான ஜல்லி கற்கள் சிதறி காணப்படுகின்றன. இதனால், இச்சாலை வழியாக வாலாஜாபாத், காஞ்சிபுரம் மற்றும் ஒரகடம், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு இருசக்கர வாகனங்களில் செல்வோர் மற்றும் லிங்காபுரம் வழியாக பல கிராமங்களுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்திற்குள்ளாகின்றனர். எனவே, தேவேரியம்பாக்கம் கூட்டுச்சாலையின் மையப்பகுதியில் குவிந்துள்ள ஜல்லி கற்களை அப்புறப்படுத்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
03-Feb-2025