உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  ஆதியோகி ரதம் காஞ்சியில் யாத்திரை

 ஆதியோகி ரதம் காஞ்சியில் யாத்திரை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் ஆதி யோகி சிலையுடன் கூடிய விழிப்புணர்வு ரத யாத் திரையை, காஞ்சி தொண்டை மண்டல ஆதீனம் துவக்கி வைத்தார். கோவை ஈஷா யோகா மையத்தில், மஹா சிவராத்திரி வரும் பிப்., 15ல் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக கோவை ஈஷா யோக மையம் சார்பில், மாவட்டந்தோறும் ஆதியோகி சிலையுடன் கூடிய வாகனம் மூலம் விழிப்புணர்வு ரத யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. காஞ்சிபுரத்தில் ஆதியோகி சிலை விழிப்புணர்வு ரத யாத்திரை, நேற்று காஞ்சிபுரம் ராஜ வீதிகளில் சென்றது. முன்னதாக காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் நுழைவாயில் அருகில், காஞ்சி தொண்டை மண்டல ஆதீனம் சிதம்பரநாத ஞானப் பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், ஆதியோகி ரதத்திற்கு சிறப்பு பூஜை செய்து துவக்கி வைத்தார். கோவை ஈஷா யோகா மையத்தில் நடக்கும், மஹா சிவராத்திரி குறித்தும், காஞ்சிபுரம் காமராஜர் வீதியில் உள்ள சித்தீஸ்வரர் மஹாலில், வரும் பிப்., 15ல் நடைபெறும், நேரடி ஒளிபரப்பு குறித்தும், மக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை