உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீடு தேர்வுக்கு அழைப்பு

விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீடு தேர்வுக்கு அழைப்பு

சென்னை, : செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லுாரியில், விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீடு பிரிவில் இலவசமாக மாணவர்களை சேர்ப்பதற்கான தேர்வு முகாம், ஏப்., 3ம் தேதி துவங்க உள்ளது.செம்மஞ்சேரி, செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லுாரியில், வரும் கல்வியாண்டிற்கான விளையாட்டு வீரர்கள் ஒதுக்கீட்டு பிரிவில் சேர்க்கைக்கான தேர்வு முகாம், அக்கல்லுாரி வளாகத்தில், ஏப்., 3ல் நடக்கிறது.இதில், 150 மாணவ - மாணவியர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவர்கள், அக்கல்லுாரியில் கட்டணமின்றி சேர்த்துக் கொள்ளப்படுவர். தேர்வு முகாமில், இருபாலருக்கும் தடகளம், கூடைப்பந்து, வாலிபால், பால் பேட்மின்டன், கபடி, டென்னிஸ், டேபிள் டென்னிஸ், செஸ், வாள் வீச்சு, கோ கோ, நீச்சல், பேட்மின்டன், பளு துாக்குதல் போட்டிகள் நடக்கின்றன. ஆண்களுக்கு கால்பந்து, ஹாக்கி மற்றும் ஆணழகன் தேர்வுகள் நடக்க உள்ளன.மேலும் விபரங்களுக்கு, 98409 86678, 73583 46875 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, கல்லுாரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி