சுற்றுச்சுவர் இல்லாத அங்கன்வாடி மையம்
ஸ்ரீபெரும்புதுார்:குன்றத்துார் ஒன்றியம், செரப்பனஞ்சேரி ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்தில், 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர்.இந்த நிலையில், அங்கான்வாடி மையத்திற்கு சுற்றுச்சுவர் இல்லை. இதனால், மையத்தை சுற்றி வளர்ந்தள்ள செடி, கொடிகளில் இருந்து பாம்பு, பூச்சி உள்ளிட்ட விஷ ஜந்துகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.மேலும், இரவு நேரங்களில் சமூக விரோதிகள், அங்கான்வாடி மையத்தின் அருகே அமர்ந்து மது அருந்துவதுடன், காலி மது பாட்டில்களை அங்கேயே வீசி செல்கின்றனர்.எனவே, போதிய பராமரிப்பு இல்லாமல், அங்கன்வாடி மையத்தை சுற்றி வளர்ந்துள்ள புதர்களை அற்றி, குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அங்கன்வாடி மையத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.