உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம்

சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு சிவன் கோவில்களில் ஐப்பசி மாத அசுவனி நட்சத்திரத்தையொட்டி நேற்று அன்னாபிஷேகம் நடந்தது. ஐப்பசி மாதத்தில் வரும் அசுவனி நட்சத்திரம் அல்லது பவுர்ணமியன்று சிவன் கோவில்களில் மூலவருக்கு அன்னாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஐப்பசி அசுவனி நட்சத்திரமான நேற்று, காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர், பிள்ளையார்பாளையம் புதுப்பாளையம் தெரு ருத்ரகோடீஸ்வரர், சிதம்பரேஸ்வரர், காமராஜர் வீதி சித்தீஸ்வரர், மேலச்சேரி லலிதாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் உள்ளிட்ட உள்ளிட்ட பல்வேறு சிவன் கோவில்களில் ஐப்பசி மாத, அஸ்வனி நட்சத்திரத்தையொட்டி நேற்று அன்னாபிஷேகம் நடந்தது. இதில், மூலவருக்கு அன்னம் மற்றும் பல்வேறு காய்கறிகள், பழங்களாலும் அலங்கரிக்கப்பட்டு அன்னாபிஷேகம் நடந்தது. சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்ட அன்னம், பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இக்கோவில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை