உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சிவன் கோவில்களில் வரும் 5ல் அன்னாபிஷேகம்

சிவன் கோவில்களில் வரும் 5ல் அன்னாபிஷேகம்

காஞ்சிபுரம்: சிவன் கோவில்களில், வரும் 5ம் தேதி, அன்னாபிஷேக விழா நடைபெற உள்ளது. காஞ்சிபுரம் அடுத்த, படுநெல்லி கிராமத்தில், வடிவுடையம்பாள் சமேத சந்திரமவுலீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, வரும் 5ம் தேதி ஐப்பசி மாத பவுர்ணமி விழா முன்னிட்டு அன்னாபிஷேக விழா நடைபெற உள்ளது. அதேபோல, விஷகண்டிகுப்பம் சக்தீஸ் வரர் கோவில், உள்ளா வூர் அகத்தீஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களில், வரும் 5ம் தேதி அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது என, அந்தந்த கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை