உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  வன்முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி

 வன்முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி

காஞ்சிபுரம்: பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணியை, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி நேற்று துவக்கி வைத்தார். காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில், தமிழக மகளிர் மேம்பாட்டு நிறுவனம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சார்பில், சர்வதேச பெண்களுக்கு எதிரான வன் முறைகள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு பேரணியை, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி கொடியசைத்து நேற்று துவக்கி வைத்தார். கலெக்டர் கலைச்செல்வி தலைமையில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தின விழிப்புணர்வு உறுதி மொழியை மகளிர் சுயஉதவிக் குழுக்கள் எடுத்துக் கொண்டனர். இப்பேரணியில் மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் ஏராளமானோர் பங்கேற்று, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி முழக்கமிட்டு சென்றனர். கலெக்டர் அலுவலகத்தில் துவங்கிய பேரணி, மூங்கில் மண்டபம் வரை சென்று நிறைவடைந்தது. இப்பேரணியில், மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், மகளிர் திட்ட இயக்குநர் பிச்சாண்டி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ