உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அப்பல்லோ மருத்துவமனை நிபுணர் குடலியல், கல்லீரல் நோய்க்கு ஆலோசனை

அப்பல்லோ மருத்துவமனை நிபுணர் குடலியல், கல்லீரல் நோய்க்கு ஆலோசனை

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னிதி தெருவில், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தகவல் மையம், ஏழு மாதங்களாக இயங்கி வருகிறது. இம்மையத்தில் வாரந்தோறும் சென்னை அப்பல்லோ மருத்துவமனையைச் சேர்ந்த பல்வேறு துறை மருத்துவ நிபுணர்கள் முகாமிட்டு மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கி வருகின்றனர்.இதுகுறித்து இம்மருத்துமனையின் குடலியல், கல்லீரலியல் மற்றும் மேம்பட்ட உடற்பை உள்நோக்கியல் மருத்துவ நிபுணர் கார்த்திக் நடராஜன் கூறியதாவது:பித்தப்பை கற்கள், குடல் இரக்கம், கல்லீரல் மற்றும் கணைய புற்றுநோய், இரைப்பை, குடல் மற்றும் .ணவு குழாய் புற்றுநோய், மூலம் பவுத்திரம் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சைக்கு காஞ்சிபுரம் தகவல் மையத்தில் ஆலோசனை வழங்கப்படுகிறது.களிம்பு வகையிலான மருந்துகளும் குடற்பகுதியின் நோய் எதிர்ப்பு தன்மையை நோக்கி செயல்படும். தொடர் ஆலோசனை, தேவைப்பட்டால் நோய் தடுப்பு மருந்துகள், உள்ளிட்ட அட்டவணை ஒவ்வொரு நோயாளிக்கும் வழங்கப்படும்.காஞ்சிபுரத்தில் உள்ள தகவல் மையத்தில் வாரந்தோறும் தைராய்டு, இதயவியல், நரம்பியல், எலும்பியல், நுரையீரல், சிறுநீரகம், குழந்தை மருத்துவம், புற்றுநோய், முதுகெலும்பு, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை, பித்தப்பை கற்கள், குடல் இரக்கம், கல்லீரல் மற்றும் கணைய புற்றுநோய், மூலம் பவுத்திரம் உள்ளிட்ட பிரச்னைக்கு அறுவை சிகிச்சைக்கு சிறப்பு மருத்துவ நிபுணர்கள் குறைந்த கட்டணத்தில் ஆலோசனை வழங்கி வருகின்றனர்.மேலும், விபரங்களுக்கு 75488 22555, 72999 68686 என்ற மொபைல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி