உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

காஞ்சிபுரம்:கல்பனா சாவ்லா விருதுக்கு பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழக சமூக நலத்துறையின் சார்பில், 2025ம் ஆண்டிற்கு, “துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா' விருதுக்கு, வீர தீர செயல்களில் ஈடுபட்ட பெண்களுக்கு, 2025ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று வழங்கப்பட உள்ளது.விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுடைய பெண் நபர்கள், தமிழகத்தை பிறப்பிடமாக கொண்டவராக இருக்க வேண்டும்.விண்ணப்பதாரர்கள் தங்களின் சுய விபரம் குறிப்புகள், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் துணிவு மற்றும் சாகசச் செயல் புரிந்தமைக்கான நாள் மற்றும் தொடர்புடைய புகைப்படத்துடன், தமிழக அரசின் விருதுகள் இணையதளமான https://awards.tn.gov.inல், ஜூன் 6ம் தேதிக்குள் கருத்துருவை, கலெக்டர் வளாகத்தில் உள்ள, மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி