உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஓவிய கண்காட்சிக்கு விண்ணப்பம் வரவேற்பு

ஓவிய கண்காட்சிக்கு விண்ணப்பம் வரவேற்பு

காஞ்சிபுரம்:தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறை, நமது நாட்டின் பாரம்பரிய கலைகளையும், பண்பாட்டையும், கலைப் பண்புகளை மேம்படுத்தவும், பாதுகாக்கும் நோக்கில், ஓவிய, சிற்பக் கலைக்காட்சி, மண்டல அலுவலகங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் மண்டலக் கலை பண்பாட்டு மையத்திற்குட்பட்ட மாவட்டங்களான, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலுார், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்துார் மாவட்டத்தில் உள்ள ஓவியர்கள் மற்றும் சிற்பக் கலைஞர்களின் படைப்புகளை சந்தைப்படுத்திடவும், காட்சிப்படுத்த, ஓவிய மற்றும் சிற்பக் கண்காட்சி நடத்தப்பட உள்ளது.இந்த ஓவிய, சிற்பக் கண்காட்சிக்கு கலைஞர்கள் தங்களது மரபு வழி, நவீனபாணி ஓவியங்கள், தஞ்சாவூர் ஓவியங்கள் மற்றும் அனைத்து வகையான சிற்பப் படைப்புகளை வழங்க வேண்டும்.முதல் பரிசாக 7 கலைஞர்களுக்கு தலா 5,000 ரூபாயும், இரண்டாம் பரிசாக 7 கலைஞர்களுக்கு தலா 3,000 ரூபாயும், மூன்றாம் பரிசு 7 கலைஞர்களுக்கு தலா 2,000 ரூபாயும், சான்றிதழும் வழங்கப்படும்.காஞ்சிபுரம் மண்டலத்திற்குட்பட்ட காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலுார், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்துார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஓவிய, சிற்பக் கலைஞர்கள் தங்களது கலைப் படைப்புகளையும், தன் விபர குறிப்புடன் படைப்புகளின் எண்ணிக்கை விபரங்களுடன், காஞ்சிபுரத்தில் உள்ள சதாவரம் பகுதியில் உள்ள கலை பண்பாட்டு துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை