மேலும் செய்திகள்
கட்டுமான தொழிற்பயிற்சி முடித்தவர்களுக்கு சான்று
13-Oct-2025
காஞ்சிபுரம்: ஒரகடம் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில், 10ம் தேதி, தேசிய தொழில் பழகுநர் மேளா நடைபெற உள்ளதாக, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஒரகடத்தில் செயல்படும் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில், பல்வேறு தொழில் பிரிவுகளைச் சேர்ந்த பயிற்சியாளர்களுக்கு, வரும் 10ம் தேதி, பிரதமரின் தேசிய தொழில் பழகுநர் மேளா, மத்திய, மாநில அரசு நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்புகளை கொண்டு நடத்தப்பட உள்ளது. இம்முகாமில், தகுதியுடைய ஐ.டி.ஐ., தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள், 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு, பிளஸ் 2 வரை படித்த அல்லது இடைநின்ற மாணவர்களும் தொழில் பழகுநர் பயிற்சியில் சேர்ந்து மத்திய அரசின் சான்றிதழ் பெற்று பயனடையலாம். இதுபற்றி தொடர்பு கொள்ள 044- 2989 4560 என்ற எண்ணில் அழைக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
13-Oct-2025