மேலும் செய்திகள்
குறு வட்ட அளவிலான தடகள போட்டி
14-Aug-2025
உத்திரமேரூர்:உத்திரமேரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில், பள்ளி கல்வித் துறை சார்பில், உத்திரமேரூர் வட்டார அளவிலான தடகள போட்டிகள் நடந்தன. உத்திரமேரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர் பழனிவேல் தலைமை தாங்கினார். வட்டார விளையாட்டு குழு துணை செயலர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். வட்டார விளையாட்டு குழு செயலர் சுப்ரமணியன் பங்கேற்று, பல்வேறு விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார். போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ -- மாணவியர், காஞ்சிபுரத்தில் நடக்க உள்ள மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டியில் பங்கேற்பர் என, கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
14-Aug-2025