உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / விழிப்புணர்வு பேரணி

விழிப்புணர்வு பேரணி

காஞ்சிபுரம்: ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை சார்பில், விழிப்புணர்வு பேரணி காஞ்சிபுரத்தில் நடத்தப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்ட, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை சார்பில், அரசு அலுவலகங்களில் விழிப்புணர்வு வில்லைகள் ஒட்டுவது மற்றும் பேரணி நடத்துவது போன்ற விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டு வருவது வழக்கம். அந்த வகையில், நடப்பாண்டுக்கான விழிப்புணர்வு பேரணியை, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, கலெக்டர் வளாகத்தில் கொடியசைத்து நேற்று துவக்கி வைத்தார். கலெக்டர் அலுவலகத்தில் துவங்கிய பேரணி, நகரின் முக்கிய சாலைகளில் சென்றது. இதில், ஏராளமான பள்ளி மாணவ - மாணவியர் பங்கேற்றனர். இதில், எஸ்.பி., சண்முகம், மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை டி.எஸ்.பி., கலைச்செல்வன், ஆய்வுக் குழு அலுவலர் சத்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி