உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பாதாள சாக்கடையில் அடைப்பு சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

பாதாள சாக்கடையில் அடைப்பு சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் நெமந்தகார ஒற்றைவாடை தெரு வழியாக, குமரகோட்டம் கோவில், பழனி ஆண்டவர் கோவில், திருவாடுதுறை ஆதீனம், தொண்டை மண்டல ஆதீனம், ஸ்ரீலஸ்ரீ ஞானப்பிரகாசர் திருமடத்திற்கு செல்வோர் சென்று வருகின்றனர்.பக்தர்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இந்த தெருவில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, இரு நாட்களாக சாலையின் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர் புத்தேரி தெரு வரை செல்கிறது. இதனால், பக்தர்கள் கழிவுநீரில் நடந்து செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது. அப்பகுதியில் வசிப்போர் பொங்கல் பண்டிகையை ஒட்டி, வீட்டு வாசலில் கோலம் போட முடியாத சூழல் உள்ளது.துர்நாற்றத்துடன் வழிந்தோடும் கழிவுநீரால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, பாதாள சாக்கடை அடைப்பை முழுதும் நீக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ