உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சரக்கு ஆட்டோ மோதி சிறுவன் உயிரிழப்பு

சரக்கு ஆட்டோ மோதி சிறுவன் உயிரிழப்பு

உத்திரமேரூர்:-உத்திரமேரூர் அருகே, சரக்கு ஆட்டோ மோதி படுகாயமடைந்த பள்ளி சிறுவன், நேற்று உயிரிழந்தான். உத்திரமேரூர் தாலுகா, சிறுங்கோழி கிராமத்தில் வசித்து வருபவர் லோகநாதன், 45. இவரது மகன் ராகவன், 5, என்பவர் பட்டாங்குளத்தில் உள்ள தனியார் பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வந்தான். தன் அண்ணன் சுரேந்தர், 15, என்பவருடன், நேற்று முன்தினம் மாலை 4:00 மணிக்கு பள்ளி முடிந்து, பட்டாங்குளத்தில் இருந்து சிறுங் கோழிக்கு சைக்கிளில் அமர்ந்து சென்றான். அப்போது, சிறுங்கோழி பகுதியில் கற்கள் ஏற்றிக் கொண்டு வந்த, 'அபே' சரக்கு ஆட்டோ, சிறுவர்கள் சென்ற சைக்கிள் மீது மோதி விபத்து ஏற்பட்டது. அதில், சிறுவன் ராகவன் தலையில் காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்தான். அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று, காலை 10:00 மணிக்கு சிறுவன் ராகவன் உயிரிழந்தான். சம்பவம் குறித்து உத்திரமேரூர் போலீசார் வழக்கு பதிந்து, சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்து, டிரைவரிடம் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ