உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மின்சாரம் பாய்ந்து கேபிள் டிவி ஆப்பரேட்டர் பலி

மின்சாரம் பாய்ந்து கேபிள் டிவி ஆப்பரேட்டர் பலி

காஞ்சிபுரம்,:ஓரிக்கை பகுதியைச் சேர்ந்தவர் முருகானந்தம், 49; கேபிள், 'டிவி' ஆப்பரேட்டர். இவர், நேற்று, ஓரிக்கை விவேகானந்தன் நகர் பகுதி மின் கம்பத்தில் செல்லும் கேபிள் 'டிவி' ஓயரை பழுது நீக்கிக் கொண்டிருந்தார். அப்போது, கேபிள், 'டிவி' ஒயர் மீது சென்றுக் கொண்டிருந்த, 15 கிலோ வாட் மின் கம்பி உரசியதில், அவர் மீது மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்தார்.அருகில் இருந்தவர்கள் மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை, பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியில் இறந்துவிட்டார் என, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை