உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தடுப்புக்காக காத்திருக்கும் கால்வாய்

தடுப்புக்காக காத்திருக்கும் கால்வாய்

காஞ்சிபுரம்:வாலாஜாபாத் ஒன்றியம், ஐயன்பேட்டை ஊராட்சி, எழில் நகருக்கு செல்லும் பிரதான சாலையோரம், வீட்டு உபயோக கழிவுநீர் மற்றும் மழைநீர் வெளியேறும் வகையில், ஊராட்சி நிர்வாகம் சார்பில், கான்கிரீட் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.தரைமட்டத்தில் திறந்தவெளி கால்வாயாக உள்ளதால், இரவு நேரத்தில், மின்விளக்கு வெளிச்சம் இல்லாத அப்பகுதியில், கனரக வாகனத்திற்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும் இருசக்கர வாகன ஓட்டிகள், திறந்து கிடக்கும் கால்வாயில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.எனவே, கால்வாய்க்கு மேல்தளம் அல்லது கால்வாயோரம் தடுப்பு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ