உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஜாதி, இருப்பிட சான்றிதழ் வழக்கம்போல் பெறலாம்

ஜாதி, இருப்பிட சான்றிதழ் வழக்கம்போல் பெறலாம்

காஞ்சிபுரம், : லோக்சபா தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து, அரசியல் கட்சியினர் படங்கள் மறைக்கப்பட்டு வருகின்றன. அதேபோல, மக்கள் பங்கேற்கும் குறைதீர் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.தேர்தல் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுவதால், வருவாய் துறையினர் வழங்கும் ஜாதி சான்று, வருமான சான்று, வாரிசு சான்று, இருப்பிட சான்று போன்ற பல வகையான சான்றுகள் தேர்தல் முடியும் வரை வழங்கப்படுமா என பொதுமக்கள் குழப்படைந்துள்ளனர்.பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நடக்கும் நிலையில், இருப்பிடம், வருமானம், ஜாதி போன்ற சான்றிதழ்கள் மாணவ - மாணவியருக்கு தேவைப்படும். தேர்தல் சமயத்தில் சான்றிதழ்கள் வழங்குவரா என, வருவாய் துறையினரை பலரும் சந்தேகம் கேட்டு வருகின்றனர்.ஆனால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் வழக்கம்போல, காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார் என, ஐந்து தாலுகா அலுவலகங்களிலும், வருவாய் துறை வழங்கும் அனைத்து சான்றிதழ்களையும் விண்ணப்பித்து பெறலாம் என, மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை