உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மங்கலம் மஞ்சியம்மன் கோவிலில் தேர் திருவிழா கோலாகலம்

மங்கலம் மஞ்சியம்மன் கோவிலில் தேர் திருவிழா கோலாகலம்

உத்திரமேரூர்:மங்கலத்தில் மஞ்சியம்மன் கோவில் தேர் திருவிழா கோலாகலமாக நடந்தது. உத்திரமேரூர் அடுத்த, மங்கலம் கிராமத்தில் உள்ள மஞ்சியம்மன் கோவிலில், இந்தாண்டிற்கான ஆடிமாத தேர் திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது. முன்னதாக, காலை 9:00 மணிக்கு அம்மனுக்கு நெய், பால், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. காலை 10:00 மணிக்கு பக்தர்கள் விரதமிருந்து ஊரணி பொங்கல் வைத்து அம்மனுக்கு படையல் இட்டனர். தொடர்ந்து, மதியம் 1:00 மணிக்கு திருத்தேர் அலங்காரம் செய்யப்பட்டு, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளி வீதியுலா வந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை