மேலும் செய்திகள்
முன்னாள் படை வீரருக்கு 29ல் குறைதீர் கூட்டம்
24-Jan-2025
காஞ்சிபுரம்:'முதல்வரின் காக்கும் கரங்கள்' என்ற திட்டம் வாயிலாக, முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர் தொழில் துவக்க 1 கோடி ரூபாய் வரை கடனுதவி பெற வழிவகை செய்யப்படும். அதிகபட்ச கடனுதவியாக, 1 கோடி ரூபாய் வழங்கப்படும்.கடன் தொகையில், 30 சதவீதம் மூலதன மானியம், கடனுக்காக செலுத்தும் வட்டியில், 3 விழுக்காடு வட்டி மானியம் வழங்கப்படும். முன்னாள் படைவீரர்கள், படைவீரரை இழந்த மனைவி, முன்னாள் படைவீரரின் மனைவி, திருமணமாகாத மகள், 25 வயதிற்கும் குறைவான முன்னாள் படைவீரரின் மகன் உள்ளிட்டோர் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.பயனாளிகளால் எந்த தொழில் துவக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதோ, அது சம்பந்தமான நுணுக்கங்கள் குறித்து, மாவட்ட தொழில் மையம் வாயிலாக இலவச அறிவுரைகள் வழங்கப்படும். தொழில் துவங்குவதற்கு முன் தொழில்நுட்ப சம்பந்தமாக இலவச பயிற்சி ஏற்பாடும் செய்யப்படும்.இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரை சார்ந்தோர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
24-Jan-2025