உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / துார்வாராததால் வறண்ட சித்தேரி

துார்வாராததால் வறண்ட சித்தேரி

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், கடல்மங்கலம் கிராமத்தில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான 450 ஏக்கர் பரப்பிலான ஏரி உள்ளது. இந்த ஏரிநீர் பாசனத்தை கொண்டு அப்பகுதியில் 600 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறுகின்றன.கடல்மங்கலம் ஏரி, பல ஆண்டுகளாக துார்வாராத நிலையில், நீர்ப்பிடிப்புப் பகுதி துார்ந்து வயல் வளர்ந்த நிலப்பகுதியாக காட்சி அளிக்கிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன் குடிமராமத்து திட்டத்தின் கீழ், இந்த ஏரிக்கான கரை பலப்படுத்துதல் மற்றும் மதகுப்பகுதி, கலங்கல் போன்றவை சீரமைத்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.எனினும், ஏரி நீர்ப்பிடிப்புப் பகுதி துார்வாரவில்லை. இதனால், மழைக்காலங்களில் ஏரிக்கு தேவையான நீர்வரத்து இருந்தும் போதுமான தண்ணீர் சேகரமாகாத நிலை தொடர்கிறது.எனவே, கடல்மங்கலம் சித்தேரி துார்வாரி நீர்த்தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ