மேலும் செய்திகள்
அஷ்டபுஜ பெருமாள் தேரோட்டம்
20-Apr-2025
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை உத்திரப்பெருவிழா 15 நாட்கள் விமரிசையாக நடைபெறும். அதன்படி நடப்பாண்டிற்கான உத்சவம் வரும் மே 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, மே 18ம் தேதி ஊஞ்சல் உத்சவத்துடன் நிறைவு பெறுகிறது.விழாவையொட்டி தினமும் காலை 7:30 மணிக்கும், இரவு 8:00 மணிக்கும் பல்வேறு வாகனத்தில், சுந்தராம்பிகையுடன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளும் கச்சபேஸ்வரர் நான்கு ராஜ வீதிகளிலும் உலா வருகிறார்.தினமும், மாலை 6:00 மணிக்கு திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள் அரங்கில், வாரியார் ஆன்மிக தொண்டு மன்றத்தினரின், திருமுறை, சொற்பொழிவு, இசை, நடன நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.விழாவிற்கான ஏற்பாட்டை கோவில் செயல் அலுவலர் ராஜமாணிக்கம், காஞ்சிபுரம் நகர செங்குந்த மகாஜன சங்கத்தினர், நிர்வாக குழுவினர், விழாக்குழுவினர், அர்ச்சகர்கள், உபயதாரர்கள், கோவில் பணியாளர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.
நாள் காலை உத்சவம் இரவு உத்சவம்மே 4 கொடியேற்றம் சிம்ம வாகனம்5 சூரிய பிரபை சந்திர பிரபை6 பூத வாகனம் திருக்கயிலை காட்சி7 நாக வாகனம் இடப வாகனம்8 அதிகார நந்தி சேவை திருக்கல்யாணம்9 - யானை வாகனம்10 மகா ரதம் -11 - குதிரை வாகனம்12 ஆள்மேல் பல்லக்கு முருக்கடி சேவை13 நடராஜர் தரிசனம் வெள்ளி ரதம்14 - புண்ணியகோட்டி விமானம்15 - பஞ்சமூர்த்திகள் உத்சவம்16 சந்திரசேகரர் தீர்த்தவாரி தங்க இடப வாகனம்17 108 சங்காபிஷேகம் 63 நாயன்மார்கள் சிறப்பு திருமுழுக்கு18 - ஊஞ்சல் உத்சவம்
20-Apr-2025