உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அழிசூர் அருளாலீஸ்வரர் கோவிலில் துாய்மை பணி

அழிசூர் அருளாலீஸ்வரர் கோவிலில் துாய்மை பணி

உத்திரமேரூர்:அழிசூர் அருளாலீஸ்வரர் கோவிலில் துாய்மை பணி நடந்தது. சென்னை, தண்டையார்பேட்டையில் ஐந்தெழுத்து ஓதும் சிவனருள் தொண்டர்கள் உழவாரப் பணி மன்றம் செயல்பட்டு வருகிறது. இந்த மன்றத்தின் மூலமாக மாதத்தின் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை, ஹிந்து கோவில்களில் துாய்மை பணி மேற்கொள்வது வழக்கம். அதன்படி, உத்திரமேரூர் அடுத்த அழிசூர் கிராமத்தில் உள்ள அருளாலீஸ்வரர் கோவிலில், உழவாரப் பணி மன்ற தலைவர் பாலமுருகன் தலைமையில் நேற்று நடந்தது. அதில், கோவில் வளாகத்தில் உள்ள செடி, கொடிகள் அகற்றப்பட்டன. தொடர்ந்து, கோவில் கோபுரம், அம்மன் சன்னிதி, முருகன் சன்னிதி, மங்கல விநாயகர் ஆகியவை துாய்மைப்படுத்தப்பட்டன. இதில், சிவனடியார் பாலன் மற்றும் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை