மூடி கிடக்கும் கூட்டுறவு சங்க பால் விற்பனை நிலையம்
காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில், திருக்காலிமேடு திருவள்ளுவர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் சூடான பால் விற்பனை நிலையம் இயங்கி வந்தது.பேருந்து நிலையத்திற்கு வந்து செல்வோர்கூட்டுறவு பால் விற்பனையகத்தில், சூடான பால் அருந்தி வந்தனர்.காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில், மூன்று மாதங்களாக மூடி கிடக்கும் கூட்டுறவு சங்கத்தின் சூடான பால் விற்பனை நிலையத்தை திறக்க, வேண்டும் என, கோரிக்கைஎழுந்துள்ளது.கூட்டுறவு சங்க அலுவலர் ஒருவரிடம் கேட்டபோது, 'சூடான பால் விற்பனை நிலையத்தில் பராமரிப்பு பணி நடந்து வருகிறது. இப்பணி முடிந்ததும் திறக்கப்படும்' என்றார்.மூடி கிடக்கும் திருக்காலிமேடு திருவள்ளுவர் பால் கூட்டுறவு சங்க பால் விற்பனை நிலையம். இடம்: காஞ்சிபுரம்