| ADDED : நவ 27, 2025 04:45 AM
காஞ்சிபுரம்: 'புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனையில் காலியாக உள்ள சித்த மருத்துவர் உள்ளிட்ட நான்கு பணியிடங்களுக்கு, தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்' என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி வெளியிட்ட செய்திக்குறிப்பு: தேசிய ஆயுஷ் குழுமத்தின் கீழ், காரைப்பேட்டையில் செயல்பட்டு வரும் அண்ணா நினைவு புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனையில், சித்த மருத்துவர், மருந்தாளுநர், யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை உதவியாளர் என, நான்கு பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்கள், தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணிநியமனம் செய்யப்பட உள்ளது. இதற்கான விண்ணப்ப படிவம் மற்றும் விபரங்கள்,https://kancheepuram.nic.inஎன்றஇணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் சான்றிதழ்களுடன், டிச., 5க்குள், காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் செயல்பட்டுவரும் மாவட்ட சுகாதார அலு வலகத்தில் உள்ள, மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் சமர்ப்பிக்கலாம். விரைவு அஞ்சலிலும் அனுப்பலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.