உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மகளிர் சுயஉதவி குழுவுக்கு ட்ரோன் விவசாயிகளுக்கு கலெக்டர் அழைப்பு

மகளிர் சுயஉதவி குழுவுக்கு ட்ரோன் விவசாயிகளுக்கு கலெக்டர் அழைப்பு

காஞ்சிபுரம்:கிராமப்புறங்களில் பயிர் சாகுபடியில் பெரும்பாலான பணிகள் பெண்களால் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே, பல்வேறு பண்ணை சார்ந்த புதிய தொழில்நுட்பங்களில் முழுமையாக ஈடுபட்டு, அதன் வாயிலாக மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்த, அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.அடுத்த கட்டமாக, ட்ரோன் தொழில்நுட்பம் பற்றி சுய உதவிக்குழு மகளிர்களுக்கு கற்று கொடுத்து, அதன் வாயிலாக வருமானத்தை உயர்த்த, மத்திய அரசு கடந்தாண்டு, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ட்ரோன் வழங்கும் திட்டத்தை அறிவித்தது.இத்திட்டத்தில், தமிழகத்தில் 44 சுய உதவிக்குழு பெண்களுக்கு, ட்ரோன் குறித்த பயிற்சி அளித்து, அதை இயக்குவதற்கான உரிமத்துடன், ட்ரோன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக பயன்படுத்தும் தெளிப்பான்களோடு ஒப்பீடு செய்தால், ட்ரோன் வாயிலாக தெளிக்கும் போது, மருந்தின் பயன்பாட்டு திறன் அதிகரிக்கிறது.மேலும், தற்போது கிராமப்புறங்களில் வேலையாட்கள் கிடைப்பது குறைந்து வரும் நிலையில், ட்ரோன் வாயிலாக குறைந்த நேரத்தில், அதிகமான பரப்பில் மருந்து தெளிக்க முடியும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ட்ரோன் மகளிர் பற்றிய விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.காஞ்சிபுரம் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ், கிளார் ஊராட்சியில், மகளிர் சுய உதவிக்குழுவுக்கு ட்ரோன் வழங்கப்பட்டுள்ளது.இக்குழுவை 82487 16615 என்ற மொபைல் எண்ணில் விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம் எனவும், உழவர் கைபேசி செயலி வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம் என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ