நிலம் வாங்க தாட்கோ கடனுதவி கலெக்டர் கலைச்செல்வி தகவல்
காஞ்சிபுரம்:தாட்கோ எனப்படும் தமிழ்நாடு ஆதிதிராவிடர்வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் சார்பில், விவசாய தொழிலாளர்களை ஊக்குவிக்கும்வகையில் விவசாய நிலம் வாங்குவதற்கு, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் வாயிலாக குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது.நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாய தொழிலாளர்கள் சமூக பொருளாதார நிலையில் மேம்பாடு அடையும் பொருட்டு அவர்கள் விவசாய நிலம் வாங்க நிலத்தின் சந்தை மதிப்பீட்டின்படி திட்டத்தொகையில், 50 சதவீதம் அல்லது அதிகப்பட்சம் 5 லட்ச ரூபாய் வரை மானியம் வழங்கப்படுகிறது.இத்திட்டத்தின் கீழ் வாங்கப்படும் நிலங்களுக்கு, 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், நிலம் வாங்குவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்கள் தாட்கோ இணையதளமான www.tahdco.comமுகவரியில் விண்ணப்பம் செய்ய வேண்டும்.மேலும், விபரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகலாம் என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்து உள்ளார்.