உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கல்லுாரி மாணவர் துாக்கிட்டு தற்கொலை

கல்லுாரி மாணவர் துாக்கிட்டு தற்கொலை

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம், மாருதி நகரில் உள்ள வேந்தன் தெருவைச் சேர்ந்தவர் திலோக். மதுராந்தோட்டத் தெருவில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு மகள் திவ்யா, மகன் ஆகாஷ்.பொத்தேரியில் உள்ள தனியார் கல்லுாரியில், ஆகாஷ், பி.பார்ம் இறுதி ஆண்டு படித்து வந்தார். கல்லுாரி விடுமுறை நாட்களில், மருந்து கடையில் பணியாற்றி வந்துள்ளார்.இந்நிலையில், மருந்து கடையில், நேற்று முன்தினம் பணியாற்றிவிட்டு, இரவு 10:00 மணிக்கு, வீட்டில் உள்ள அறைக்கு துாங்க சென்றுள்ளார். அப்போது, அவரது சகோதரி, 11:00 மணிக்கு, அறையின் கதவை தட்டியுள்ளார்.கதவை திறக்காததால், உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, துாக்கு போட்டு ஆகாஷ் இறந்த நிலையில் இருந்தார்.காஞ்சி தாலுகா போலீசார், மாணவர் ஆகாஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், காதல் பிரச்னை என்பது தெரிய வந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை