உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / இரு மாதங்களாக நடத்தப்படாத மாநகராட்சி கூட்டம் மேயர் மீது தி.மு.க., கவுன்சிலர் கமிஷனரிடம் புகார் மனு

இரு மாதங்களாக நடத்தப்படாத மாநகராட்சி கூட்டம் மேயர் மீது தி.மு.க., கவுன்சிலர் கமிஷனரிடம் புகார் மனு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியில், தி.மு.க.,வைச் சேர்ந்த மேயர் மகாலட்சுமி மீது, தி.மு.க.,- - அ.தி.மு.க., என அனைத்து கட்சி கவுன்சிலர்கள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் காரணத்தால், மாநகராட்சி நிர்வாகத்தில் பல்வேறு பிரச்னைகள் எழுந்தன.எட்டு மாதங்கள் பின், கடந்த செப்.,3ம் தேதி, மாநகராட்சி கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் விவாதம் நடத்தாமல், ஒட்டுமொத்தமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கவுன்சிலர்கள் குற்றஞ்சாட்டினர்.தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதற்கு எதிராக, 34வது வார்டு தி.மு.க.,கவுன்சிலர் பிரவீன்குமார் மற்றும் 16வது வார்டு சுயேட்சை கவுன்சிலர் சாந்தி துரைராஜன் ஆகிய இருவரும், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இவ்வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், மாநகராட்சி கூட்டம் அக்டோபர் மாதம் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நவம்பர் மாதம் துவங்கி 10 நாட்கள் ஆகியும் இதுவரை கூட்டம் நடத்தப்படவில்லை.இந்நிலையில், மாநகராட்சி கூட்டத்தை நடத்தாமல், மேயர் மகாலட்சுமி தவிர்ப்பதாகவும், போதிய ஆதரவு கவுன்சிலர்கள் அவருக்கு இல்லை என, 34வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் பிரவீன்குமார், மாநகராட்சி கமிஷனரிடம் புகார் மனு அளித்துள்ளார்.இதுகுறித்து, காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமியிடம் கேட்டபோது, ''இம்மாதம் 18ம் தேதி, மாநகராட்சி கூட்டம் நடத்த திட்டமிட்டு உள்ளோம். அந்த தேதி உறுதியான பின் தகவல் தெரிவிக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை