உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  மண் அரிப்பால் கான்கிரீட் பீடம் சேதம்: சாய்ந்து விழும் நிலையில் குடிநீர் தொட்டி

 மண் அரிப்பால் கான்கிரீட் பீடம் சேதம்: சாய்ந்து விழும் நிலையில் குடிநீர் தொட்டி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பாவாஜி தெருவில், மண் அரிப்பு ஏற்பட்டு, நிலத்தடியில் பிடிப்பு இல்லாத குடிநீர் தொட்டியின் பீடத்தை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் பாவாஜி தெருவில் வசிப்பவர்களுக்கு கூடுதல் குடிநீர் ஆதாரமாக மஞ்சள் நீர் கால்வாய்யோரம் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. வீட்டு உபயோக கூடுதல் தேவைக்கு இத்தெருவினரும், சுற்றியுள்ள கடைக்காரர்களும் குடிநீர் தொட்டி நீரை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், மஞ்சள் நீர் கால்வாய்க்கு புதிதாக தடுப்புச்சுவர் கட்டுமானப் பணிக்காக, குடிநீர் தொட்டியின் பீடத்தின் ஓரம் பள்ளம் தோண்டப்பட்டது. இதனால், குடிநீர் தொட்டியின் பீடத்தின் அடிப்பாகத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு, நிலத்தடியில் பிடிப்பு இல்லாததால், பீடம் சற்று சாய்ந்த நிலையில் உள்ளது. நாளடைவில் மேலும், மண் அரிப்பு ஏற்பட்டு பீடத்துடன் குடிநீர் தொட்டி சாய்ந்து விழும் நிலை உள்ளது. எனவே, குடிநீர் தொட்டியின் பீடத்தின் அடிப்பாகத்தில் மண் அரிப்பு ஏற்பட்ட பகுதியை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாவாஜி தெரு மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை