உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சாலையோரம் கொட்டியுள்ள கட்டட கழிவால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம்

சாலையோரம் கொட்டியுள்ள கட்டட கழிவால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம்

வேடல்:சாலையோரம் கொட்டியுள்ள கட்டடக் கழிவுகளால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை நான்குவழி சாலை, ஆறுவழி சாலையாக விரிவு மற்றும் உயர் மட்ட மேம்பாலங்கள் அமைக்க தேசிய நெடுஞ்சாலை துறை திட்டமிட்டது. இதற்கு, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலமாக, 654 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, மூன்று பிரிவுகளாக ஒப்பந்தம் விடப்பட்டு உள்ளன. மதுரவாயல் - ஸ்ரீபெரும்புதுார் வரை, 23 கி.மீ.,; ஸ்ரீபெரும்புதுார் - காரப்பேட்டை வரையில், 34 கி.மீ.,; காரப்பேட்டை - -வாலாஜாபேட்டை வரையில், 36 கி.மீ.., கட்டுமானப் பணிகள் மற்றும் ஒரகடம் கூட்டுசாலை, சந்தவேலுார், சின்னையன்சத்திரம், ராஜகுளம், ஏனாத்துார் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், மேம்பாலங்கள் கட்டும் பணி நடந்து வருகின்றன. இந்த சாலையோரம், தனியார் வீட்டுமனைப் பிரிவுக்கு பாதை அமைப்பதற்கு, வீட்டுமனை பிரிவு நிர்வாகம் மழைநீர் கால்வாய் ஓரம் கட்டடக் கழிவுகளை கொட்டி உள்ளனர். மேலும், கனரக வாகனம் மழைநீர் கால்வாய் மீது சென்றதால், சிலாப் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் நடந்து செல்வோர், வாகன ஓட்டிகள் சிரமத்தை சந்திக்க வேண்டி உள்ளது என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் ஆய்வு செய்து சேதமடைந்த மழைநீர் கால்வாயை சீரமைக்கவும், சாலையோர கொட்டிய கட்டடக் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக் க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி