மேலும் செய்திகள்
அ.தி.மு.க., - கம்யூ., கைகோர்ப்பு
26-Aug-2025
ஸ்ரீபெரும்புதுார்;ஸ்ரீபெரும்புதுாரில் நேற்று நடந்த ஒன்றிய குழு கூட்டத்தில், தீர்மான புத்தகத்தில் பக்கங்கள் காலியாக விடப்பட்டு கையெழுத்து வாங்கி, முறைகேடில் ஈடுபடுவதாக கவுன்சிலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியக்குழு கூட்டம், தி.மு.க., ஒன்றிய குழு தலைவர் கருணாநிதி தலைமையில், வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. ஸ்ரீபெரும்புதுார் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துகணபதி, ஒன்றிய குழு துணைத் தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் 22 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இந்த நிலையில், தீர்மான புத்தகத்தில் சில பக்கங்கள் எதுவும் எழுதாமல் காலியாக விடப்பட்டு, கவுன்சிலர்களிடம் கையொப்பம் வாங்கப்பட்டதாக, கவுன்சிலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இது குறித்து, 2வது வார்டு வி.சி., கவுன்சிலர் தியாகராஜன் கூறியதாவது: இன்று - நேற்று - நடந்த கூட்டத்தில் 22 தீர்மானங்கள் முன் வைக்கப்பட்டு, நிறைவேற்றபட்டன. இந்த நிலையில், தீர்மான புத்தகத்தில், 22 தீர்மானங்கள் எழுதப்பட்ட நிலையில், அதை தொடந்து 4 பக்கங்கள் எதுவும் எழுதப்படாமல் காலியாக விடபட்டு கவுன்சிலர்களிடம் கையொப்பம் வாங்கப்பட்டது. காலியாக விடப்பட்ட பக்கங்களில், செய்யாத பணிகளை எழுதி, முறைகேடில் ஈடுபடுகின்றனர். எனவே, கலெக்டர் ஆய்வு மேற்கொண்டு, முறைகேடில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இது குறித்து, வட்டார வளர்ச்சி அலுவலர் முத்து கணபதியிடம் கேட்ட போது, ''கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட 22 தீர்மானங்கள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன, இதில், எந்த முறைகேடு களும் நடக்கவில்லை'' என்றார்.
26-Aug-2025