மேலும் செய்திகள்
திறப்பு விழா முடிந்தும் பூட்டியுள்ள ரேஷன் கடை
02-May-2025
உத்திரமேரூர், உத்திரமேரூர் கல்வெட்டு கோவில் அருகே, பேருந்து நிலையம் இயங்கி வருகிறது. இந்த பேருந்து நிலையத்திற்கு, செங்கல்பட்டு, சென்னை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து, தினமும், பேருந்துகள் வந்து செல்கின்றன.உத்திரமேரூரை சுற்றியுள்ள 40க்கும் மேற்பட்ட கிராமத்தினர், இந்த பேருந்து நிலையத்தை பயன்படுத்தி, பல்வேறு பகுதிகளுக்கு தினமும் சென்று வருகின்றனர்.இங்குள்ள, பேருந்து நிலைய கட்டடம், 40 ஆண்டுக்கு முன் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த கட்டடத்தில் நேர காப்பாளர் அறை, பாலூட்டும் பெண்கள் அறை, பயணியர் கழிப்பறை, பயணியர் காத்திருப்பு இருக்கைகள் ஆகியவை உள்ளன.தற்போது, பேருந்து நிலைய கட்டடம் முறையாக பராமரிப்பு இல்லாமல் உள்ளது. கட்டடத்தில் அரச மரச்செடிகள் வளர்ந்து வருகின்றன. இதனால், கட்டட சுவரில் விரிசல் ஏற்பட்டு உள்ளது.எனவே, பேருந்து நிலைய கட்டடத்தில் வளர்ந்துள்ள அரச மரச்செடிகளை அகற்ற, பேரூராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க, பயணியர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
02-May-2025