உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அரச மரச்செடி வளர்ந்துள்ளதால் எச்சூரில் குடிநீர் தொட்டியில் விரிசல்

அரச மரச்செடி வளர்ந்துள்ளதால் எச்சூரில் குடிநீர் தொட்டியில் விரிசல்

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், எச்சூர் ஊராட்சி, பள்ளிக்கூட தெருவில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு நாள்தோறும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், அரச மரச்செடி வளர்ந்துள்ள, 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் விரிசல் ஏற்பட்டு உள்ளது.இதனால், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உறுதி தன்மை இழக்கும் சூழல் ஏற்படும் நிலை உள்ளது. எனவே, குடிநீர் தொட்டியில் வளர்ந்துள்ள அரச மரச்செடியை அகற்றி, ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை