உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / புரட்டாசி முதல் சனிக்கிழமை பெருமாள் கோவில்களில் கூட்டம்

புரட்டாசி முதல் சனிக்கிழமை பெருமாள் கோவில்களில் கூட்டம்

காஞ்சிபுரம்,:புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையான நேற்று, காஞ்சிபுரத்தில் உள்ள பெருமாள் கோவில்களில், பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை, பெருமாளுக்கு மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது. சாதாரண சனிக்கிழமையைவிட, புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாள் கோவில்களில் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்கும். Galleryஅதன்படி, புரட்டாசி மாத முதல் வார சனிக்கிழமையான நேற்று, காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில், அஷ்டபுஜ பெருமாள், வைகுண்டபெருமாள், உலகளந்த பெருமாள், விளக்கொளி பெருமாள், யதோக்தகாரி பெருமாள் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் வழக்கத்தை விட பக்தர்களின் கூட்டம் அதிகமாக காண முடிந்தது. இக்கோவில்களில் பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !