உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சேதமடைந்த குடிநீர் தொட்டி சிட்டியம்பாக்கத்திதில் அவலம்

சேதமடைந்த குடிநீர் தொட்டி சிட்டியம்பாக்கத்திதில் அவலம்

சிட்டியம்பாக்கம்:வாலாஜாபாத் ஒன்றியம் இலுப்பப்பட்டு ஊராட்சி, சிட்டியம்பாக்கம் கிராமத்தில், 35 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வாயிலாக, கிராமத்தினருக்கு குழாய் வாயிலாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில், குடிநீர் தொட்டியை தாங்கும் துாண்களில், ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு, கம்பிகள் வெளியே தெரிகின்றன. ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகே, சிறுவர்கள் விளையாடுகின்றனர்.கால்நடைகளும் அப்பகுதியில் சுற்றித் திரிகின்றன. அப்பகுதியில் வீடுகள் உள்ளதால், அதிகளவில் மக்கள் நடமாட்டமு உள்ளது. இதனால், வலுவிழந்த நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழுந்தால், பெரிய அளவில் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே, சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அகற்ற வேண்டும் எனவும், புதிதாக கட்டப்பட்டு வரும் மேல்நிலை தொட்டியை உடனடியாக திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சிட்டியம்பாக்கம் வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து ஊரக வளர்ச்சி ஊராட்சி துறை அதிகாரி கூறியதாவது:சிட்டியம்பாக்கத்தில், சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு மாற்றாக, அதே பகுதியில் புதிதாக மேல்நிலை தொட்டி கட்டப்பட்டு, வர்ணம் தீட்டும் பணி நடந்து வருகிறது. இப்பணி முடிந்ததும், புதிய தொட்டி விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு, பழைய தொட்டி இடித்து அகற்றப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை