உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சேதமடைந்த பயணியர் நிழற்குடை

சேதமடைந்த பயணியர் நிழற்குடை

உத்திரமேரூர்உத்திரமேரூர் - காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில், திருப்புலிவனம் பயணியர் நிழற்குடை உள்ளது. இந்த பயணியர் நிழற்குடையை பயன்படுத்தி,பேருந்து வாயிலாக மக்கள் பல்வேறு பகுதிகளுக்கு, தினமும் சென்று வருகின்றனர்.இங்கு அமரும் இடம், தரை மற்றும் படிகெட்டு ஆகியவை, டைல்ஸ் கற்களால் பதிக்கப்பட்டு இருந்தது. முறையாக பராமரிப்பு இல்லாததால், டைல்ஸ் கற்கள் உடைந்து சேதமடைந்துள்ளன.பேருந்துக்காக வரும் பயணியர், நிழற்குடையின் உள்ளே செல்லும்போது, சேதமடைந்த பகுதியில் இடித்து கொள்கின்றனர்.எனவே சேதமடைந்த பயணியர் நிழற்குடையை சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை