சேதமடைந்த சாலை குளமாக மாறிய அவலம்
உத்திரமேரூர், உத்திரமேரூர் ஒன்றியம், திருப்புலிவனத்தில், காஞ்சிபுரம் - -உத்திரமேரூர் நெடுஞ்சாலை உள்ளது. இதிலிருந்து, கலியாம்பூண்டி சாலை பிரிந்து செல்கிறது. இந்த சாலையை பயன்படுத்தி, அழிசூர், ஆண்டித்தாங்கல், ராவத்தநல்லுார் உள்ளிட்ட,கிராமங்களைச் சேர்ந்தவர்கள், காஞ்சிபுரம், வாலாஜாபாத் ஆகிய பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.இந்நிலையில், முறையாக பராமரிப்பு இல்லாததால், இரண்டு சாலையும் இணையும் இடத்தில், கலியாம்பூண்டி சாலை சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது.பள்ளத்தில் மழைநீர் தேங்கி உள்ளதால், வாகன ஓட்டிகள் ஒதுங்கி செல்லும்போது, எதிரே வரும் வாகனத்தோடு மோதி,விபத்தில் சிக்கும் சூழல் ஏற்படுகிறது.எனவே, சேதமடைந்த கலியாம்பூண்டி சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.