உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தாழ்வாக செல்லும் மின்கம்பியால் விபத்து அபாயம்

தாழ்வாக செல்லும் மின்கம்பியால் விபத்து அபாயம்

உத்திரமேரூர்:உத்திரமேரூர் பேரூராட்சியில் உள்ள, சின்ன நாரசம்பேட்டை தெருவில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளுக்கு, சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்களின் வாயிலாக, மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.தற்போது, இப்பகுதியில் உள்ள இரு மின்கம்பங்களுக்கு இடையே செல்லும் மின்கம்பிகள் தளர்ந்து தாழ்வாக உள்ளன. இதனால், அவ்வழியே வைக்கோல் ஏற்றிச்செல்லும் வாகனங்கள் மீது, மின் கம்பிகள் உரசி, மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.மேலும், தளர்ந்து கிடக்கும் மின்கம்பிகள் மழை மற்றும் காற்று வீசும் நேரங்களில் அறுந்து விழுந்து உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.எனவே, தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை இழுத்து கட்ட, மின்வாரியத் துறையினர் முன்வர அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி