உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மஹாளய அமாவாசை முன்னோர்களுக்கு தர்ப்பணம்

மஹாளய அமாவாசை முன்னோர்களுக்கு தர்ப்பணம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, திம்மராஜம்பேட்டை கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், பர்வத வர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.இங்கு, முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிக்கும், பரிகாரஸ்தலமாக விளங்கி வருகிறது. மஹாளய அமாவாசையையொட்டி, நேற்று, பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று, முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்தனர்.அதேபோல, திருப்புட்குழி கிராமத்தில், மரகதவல்லி தாயார் சமேத விஜயராகவப் பெருமாள் கோவில், ஜடாயு தீர்க்க கரை ஓரம் பொது மக்கள் நீண்ட வரிசையில் நின்று தர்ப்பணம் அளித்தனர்.காஞ்சிபுரத்தில் உள்ள சர்வதீர்த்த குளக்கரை, கச்சபேஸ்வரர் கோவில் குளம், தாயார் குளம் உள்ளிட்ட கோவில் குளங்களில், தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காக திரளானோர் குவிந்தனர்.இதனால், இக்குளக்கரைகளில் தர்ப்பணம் கொடுக்க வந்தவர்களின் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் காத்திருந்து, தேங்காய், பழம், எள், வெல்லம், ஊதுவர்த்தி, கற்பூரம் ஏற்றி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின், பசுவிற்கு அகத்திக்கீரையை உணவாக வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை