மேலும் செய்திகள்
இடியும் அபாய நிலையில் ஊராட்சி அலுவலக கட்டடம்
21-Sep-2025
ஸ்ரீபெரும்புதுார்:வடமங்கலம் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி அலுவலக கட்ட டத்தின் முகப்பில் எழுதப்பட்டுள்ள பெயர்களை மர்ம நபர்கள் பெயின்ட் ஊற்றி அழித்துள்ளனர். ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்திற்குட்பட்ட வடமங்கலம் ஊராட்சியில் 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு, ஊராட்சி அலுவலகத்திற்கு தனி கட்டடம் இல்லை. இதனால், பல ஆண்டுகளாக, கிராம சேவை மைய கட்டடத்தில் இயங்கி வந்தது. இதையடுத்து, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2024 - 25ம் நிதி ஆண்டில், 30 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக ஊராட்சி அலுவலகம் கட்டப்பட்டது. கடந்த மாதம் பணிகள் நிறைவடைந்து நிலையில், மர்ம நபர்கள் சிலர் ஊராட்சி அலுவலக கட்டடத்தின் முன்புறம் எழுதப்பட்டிருந்த திட்டம் மற்றும் பணி விபரங்கள் அடங்கிய எழுத்துகளில், நீல வண்ணம் பூசி அழித்து உள்ளனர். புதிய அலுவலக கட்டடம் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்த்த நிலையில், இச்சம்பவம் அப்பகுதி மக்களுக்கிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் வரி பணத்தில் கட்டப்படும் அரசு கட்டடங்களில் இது போன்ற அத்துமீறலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
21-Sep-2025