உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் நகை கடன் வழங்குவதில் இழுத்தடிப்பு

 காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் நகை கடன் வழங்குவதில் இழுத்தடிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் சமீபத்தில், 3.47 கோடி ரூபாய் முறைகேடு நடந்த நிலையில், கிளை வங்கிகளில் நகைக் கடன் வழங்காமல், ஊழியர்கள் இழுத்தடித்து வருகின்றனர். காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின்கீழ், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில், 52 கிளை வங்கிகள் இயங்கி வருகின்றன. தலைமை அலுவலகத்தில், தணிக்கை பிரிவு மேலாளர் பவன்குமார் என்பவர், பிற வங்கி கிளைகளுக்கு பணம் பரிவர்த்தனை செய்து, 3.47 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார். காவல்துறை நடவடிக்கைக்கு பின், 60 லட்ச ரூபாயுடன் பவன்குமார் தலைமறைவாக உள்ளார். இதன் காரணமாக, பல்வேறு வங்கி கிளைகளில் நகை கடன் மற்றும் பிற கடன்கள் வழங்க, மேலாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி வாலாஜாபாத் கிளையில், நகை கடன் வாங்க 20 நாட்களுக்கு மேலாகும் என, வாடிக்கையாளர்களை இழுத்தடிக்கின்றனர். அதே துறை சார்ந்த அதிகாரிகள் பரிந்துரைத்தால் மட்டுமே, இழுத்தடித்து இரு தினங்களில் கடன் வழங்குகின்றனர். உத்திரமேரூர் கிளை வங்கியிலும் இதே நிலை தான் நீடித்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை