உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சாலையோரம் டாஸ்மாக் இடம் மாற்ற வலியுறுத்தல்

சாலையோரம் டாஸ்மாக் இடம் மாற்ற வலியுறுத்தல்

படப்பை: படப்பை அருகே, நெடுஞ்சாலையோரம் இயங்கும் அரசு டாஸ்மாக் கடையை, வேறு பகுதிக்கு இடம் மாற்றம் செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. வண்டலுார் - வாலாஜாபாத் நெடுஞ்சாலையில், தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. கனரக வாகனங்களால், இந்த சாலையில் அடிக்கடி விபத்து நடக்கிறது. இந்நிலையில், இந்த சாலையில் படப்பை அருகே சாலமங்கலம் பகுதியில், கடந்த 29ம் தேதி புதிய டாஸ்மாக் மது கடை திறக்கப்பட்டது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: இந்த சாலையில் அதிவேகத்தில் கனரக வாகனங்கள் செல்வதால், அடிக்கடி விபத்து நடக்கிறது. நெடுஞ்சாலையோரம் அமைந்துள்ள டாஸ்மாக் கடையின் உள்ளே, 1,500 சதுர அடியில் மது கூடம் இயங்குகிறது. கடையின் முன் போதிய பார்க்கிங் வசதி இல்லை. இதனால், டாஸ்மாக் கடைக்கு வருவோர், தங்கள் பைக், கார்களை சாலையோரம் நிறுத்து கின்றனர். மேலும், சாலையின் எதிர் திசையில் வாகனம் ஓட்டி வந்து, போக்குவரத்துக்கு இடையூறு செய்கின்றனர். மது போதையில் சாலையின் குறுக்கும் நெடுக்குமாக செல்கின்றனர். அரசு பேருந்துகள் அதிகம் செல்லும் இந்த சாலையில் உள்ள டாஸ்மாக் கடையால், பெரும் விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே, நெடுஞ்சாலையில் இருந்து, இந்த கடையை வேறு பகுதிக்கு இடம் மாற்றி அமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ