மேலும் செய்திகள்
கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்
26-Nov-2024
காஞ்சிபுரம், வங்கதேச அரசு ஹிந்துக்களுக்கு எதிராக செயல்படுவதை கண்டித்து, தமிழகம் முழுதும் பா.ஜ.,வினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் எதிரே, பா.ஜ., ஹிந்து முன்னணி மற்றும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு இணைந்து, நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்திற்கு பா.ஜ., தேசிய பொதுக்குழு உறுப்பினர் நம்பிநாராயணன், காஞ்சிபுரம் மாவட்ட பா.ஜ., தலைவர் பாபு ஆகியோர் தலைமை வகித்தனர்.வங்கதேசத்தில் ஹிந்து கோவில்கள் மற்றும்ஹிந்துக்கள் தாக்கப்படுவதை கண்டித்து, ஆர்ப்பாட்டதில் பங்கேற்றவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற, 102 பேரை போலீசார் கைது செய்தனர். அதன்பின் நேற்று மாலை விடுவிக்கப்பட்டனர். கிராம உதவியாளர்கள்
அதேபோல், காஞ்சி புரம் கோட்ட தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர் சங்கத்தினர், 150க்கும் மேற்பட்டோர், நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, காஞ்சிபுரம் சார் - ஆட்சியர்அலுவலகம் முன்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.வரையறுக்கப்பட்ட காலம் வரை ஊதியம் வழங்கிடுதல், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், கருணை அடிப்படையில் வேலை வழங்கிடுதல்,கிராம உதவியாளர்காலி பணியிடங்களைஉடனடியாக நிரப்புதல்உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திவருகின்றனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதுார் ஆகிய இரு கோட்ட அலுவலகங்கள் முன், கிராம உதவியாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
26-Nov-2024