உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / இருவித வேகத்தடைகளால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம்

இருவித வேகத்தடைகளால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம்

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் அடுத்த, முத்தியால்பேட்டை கிராமத்தில் இருந்து, நத்தப்பேட்டை, களியனுார், வையாவூர், கரூர் ஆகிய கிராமங்களின் வழியாக, ராஜகுளம் வரை புறவழிச் சாலை உள்ளது.இங்கு, நத்தப்பேட்டை ரயில் கடவுப்பாதையின் இருபுறத்தில், வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளன. அதன் அருகே, பிளாஸ்டிக் கட்டையால் ஆன இரண்டு வித வேகத்தடைகள் அடுத்தடுத்து அமைக்கப்பட்டு உள்ளன.இதில், தாரால் போட்ட வேகத்தடை மீது, வெள்ளை நிற வர்ணம் பூசவில்லை என, வாகன ஓட்டிகள் இடையே புலம்பல் ஏற்படுத்தி உள்ளது.இந்த வேகத்தடை மீது, வாகனங்கள் செல்லும் போது, வாகனத்தின் வேகம் குறைக்க வேண்டி உள்ளது. குறைத்த வேகத்தை, மீண்டும் கூட்டி வேகத்தை குறைக்கும் போது, வாகனங்கள் நிலை தடுமாறி செல்ல வேண்டி உள்ளது.எனவே, முத்தியால்பேட்டை - ராஜகுளம் இடையே, நத்தப்பேட்டை ரயில் கடவுப்பாதையில் போடப்பட்டு இருக்கும் கூடுதல் வேகத்தடைகளை அகற்ற வேண்டும் என, வாகன ஓட்டிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து, நெடுஞ்சாலைத் துறையினர் கூறுகையில், ஆய்வு செய்து விட்டு, அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ