உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  தினமலர் செய்தி எதிரொலி: பெரியகரும்பூரில் பஸ் நிறுத்தத்தில் மின் விளக்கு பொருத்தம்

 தினமலர் செய்தி எதிரொலி: பெரியகரும்பூரில் பஸ் நிறுத்தத்தில் மின் விளக்கு பொருத்தம்

காஞ்சிபுரம்;நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, பெரியகரும்பூர் பேருந்து நிறுத்தத்தில், மின் விளக்கு வசதியை நெடுஞ்சாலைத் துறையினர் அமைத்து உள்ளனர். செங்கல்பட்டு - காஞ்சிபுரம் - திருத்தணி வரையில், 85 கி.மீ., இருவழி சாலை உள்ளது. இந்த இருவழி சாலை, சென்னை - கன்னியாகுமரி சாலை விரிவாக்க திட்டத்தில், நான்குவழி சாலையாக விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது. காஞ்சிபுரம் - -அரக்கோணம் இடையே விரிவுபடுத்தப்பட்டுள்ள நான்குவழி சாலை ஓரத்தில், பெரிய கரும்பூர் பேருந்து நிறுத்தத்தில், மின் விளக்கு அமைக்கவில்லை. இதுகுறித்தான செய்தி நம் நாளிதழில் வெளியானதையடுத்து, நெடுஞ்சாலைத் துறையினர் பெரியகரும்பூர் பேருந்து நிறுத்தம் அருகே, மின் விளக்குகள் அமைத்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ