உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ரூ.4.44 கோடியில் நலத்திட்ட உதவி 592 பயனாளிகளுக்கு வழங்கல்

ரூ.4.44 கோடியில் நலத்திட்ட உதவி 592 பயனாளிகளுக்கு வழங்கல்

காஞ்சிபுரம், அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஆதிதிராவிடர்,பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்மற்றும் சிறுபான்மையினருக்கான நலத்திட்ட உதவி கள் வழங்கும் விழா, காஞ்சிபுரம் தனியார் திருமண மண்டபத்தில், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நேற்று நடந்தது.இதில், 592 பயனாளிகளுக்கு 4.44 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, உத்திரமேரூர் தி.மு.க.,- - எம்.எல்.ஏ., சுந்தர், காஞ்சிபுரம் தி.மு.க., - -எம்.எல்.ஏ., எழிலரசன்ஆகியோர் வழங்கினர்.இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் மாநகராட்சியில் பணிபுரியும், 90 துப்புரவு பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து, மரியாதை செய்து, பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினர்.தொடர்ந்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ், 7 பயனாளிகளுக்கு வேலைவாய்ப்பும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், 172 பயனாளிகளுக்கு 2.08 கோடி ரூபாய்மதிப்பிலான -பட்டாக்கள் வழங்கப்பட்டன.மேலும், உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில், 106 பயனாளிகளுக்கு 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான கால்நடை பராமரிப்பு கடன்கள் என, பல்வேறு திட்டங்களின் கீழ், 592 பயனாளிகளுக்கு, 4.44 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.இந்நிகழ்விற்கு முன்னதாக, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அண்ணல் அம்பேத்கரின் உருவப்படத்திற்கு கலெக்டர் மலர்துாவி, மரியாதை செலுத்தினார்.இதில், சப்- - கலெக்டர் ஆஷிக் அலி, காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி, ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைஅதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை