உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஓரிக்கை பாலாறு பாலத்தில் மணல் குவியலால் இடையூறு

ஓரிக்கை பாலாறு பாலத்தில் மணல் குவியலால் இடையூறு

ஓரிக்கை:காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை, ஓரிக்கை - குருவிமலை கிராமத்திற்கு இடையே செல்லும் பாலாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் உள்ளது. இப்பாலத்தின் வழியாக உத்திரமேரூர், அச்சிறுப்பாக்கம், வேடந்தாங்கல் மதுராந்தகம், மேல்மருவத்துார் உள்ளிட்ட பகுதிக்கு செல்லும் வாகனங்கள் சென்று வருகின்றன.கட்டுமானப்பணிக்காக லாரிகளில் எடுத்துச்சென்ற எம்.சாண்ட் மணல் சிதறி, இப்பாலத்தின் சாலையோரம் குவியலாக உள்ளது. இதனால், இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் கனரக வாகனங்களுக்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும் மணல் குவியலில் சிக்கி விபத்தில் சிக்குகின்றனர்.எனவே, விபத்தை தவிர்க்கும் வகையில், ஓரிக்கை பாலாறு மேம்பால சாலையோரம், போக்குவரத்துக்கு இடையூறாக குவிந்துள்ள எம்.சாண்ட் மணல் குவியலை அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !